நூல்
அறிமுக உரை :
நூலின்
பெயர்:
கணினிக்கதைகள்
10
தொகுதி
– 1
நாப்பழக்கச்
செழுங்கவிதை
அண்டமெல்லாம்
பற்றுறுதி கொண்டு கற்றறிய
பொங்குதமிழ்
தொட்டெழுதிப் படைக்கின்றேன்
புதுவிருந்து
யான் உற்றறிந்ததை.
உற்றறிந்ததில்
ஊறு காணாமல்
சிற்றறிவு
பேரறிவு பிணக்கில்லாமல்
பற்றிடுவீர்
தமிழ் சுவைஞர்களே!
சுவைஞர்களே
அமிழ்தஞ்சுவையறிய
செப்புங்கள்
"தமிழ்
தமிழ்"
என்று
பிழையறாது
இடையறாது.
-
பெங்களூரு.
பணியா.
பிரசன்னா
தமிழ்
வழிக் கல்வி கற்றமையால்,
இயன்ற
வரையில் இனிய தமிழில் எழுத
வேண்டும்.
அதுவும்
தனித்தமிழில் எழுத வேண்டும்
என்பது எனக்கு தொன்று தொட்டு
இருக்கும் பேரவா.
வேலையின்
பொருட்டு வேறூர் வந்திருந்தாலும்,
தமிழை
மறக்காமல் படைப்புக்களைத்
தமிழில் எழுத வேண்டும் என்ற
உள்ளத்துப் பள்ளத்தின்
உவகையால் பிறந்தவைகள்தாம்
இந்நூலில் வரும் கணினிக்கதைகள்.
இன்றைய
சூழலில் ஏறத்தாழ அனைவருக்குமே
கணினி பற்றித் தெரிகிறது.
இருப்பினும்,
இன்னும்
அதனுடைய விழுக்காடு அதிகரிக்கும்
பொருட்டு,
கதைகள்
மூலமாக கணினிச்செய்திகளை
வெளியிட்டால் அது அனைவரையும்
தொடும் என்பது எனது எளிய
கருத்து.
இவ்வாறு
செய்யும் பொழுது மறந்த தமிழ்
மீண்டும் நம் நினைவில்
துளிர்ப்பத்திற்கு மட்டுமல்ல,
தமிழ்
வழிக்கல்வி கற்றோர் அருமையாக
புதிய நுட்பங்களைக் கற்பதற்கும்,
கற்ற
நுட்பத்தை மேம்படுத்திக்
கொள்வதற்கும் ஏதுவாகிறது.
நான்
பல கணினிக்கதைகளை எழுதியிருப்பினும்,
இதில்
பத்துக் கதைகளை மட்டும் எழுதி
தொகுதி ஒன்று என்று
கொடுத்திருக்கிறேன்.
இன்னும்
இது போன்று மற்ற தொகுதிகளைக்
கொடுக்க விழைகிறேன்.
அன்பன்,
பெங்களூரு.
பணியா.
பிரசன்னா,
askprasanna@gmail.com
.